in

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் விக்கிரகங்கள் சில உடைப்பு, விக்கிரகங்கள் சில மாயம்! அதிகரித்த இராணுவ நடமாட்டம்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் விக்கிரகங்கள் சில உடைப்பு, விக்கிரகங்கள் சில மாயம்! அதிகரித்த இராணுவ நடமாட்டம்!

வவு­னியா நெடுங்­கே­ணி­யில் அமைந்­துள்ள வெடுக்­கு­நாறி ஆதி­லிங்­கேஸ்­வ­ரர் கோவில் பகு­தி­யில், இந்­துத் தெய்வ விக்­கி­ர­கங்­கள் சில காணா­மற்­போ­யுள்­ளன. அது­மட்­டு­மன்றி, நேற்­றுக்­காலை தொடக்­கம் அதி­க­ள­வான இரா­ணு­வத்­தி­னர், அந்­தப் பகு­தி­யில் காணப்­ப­டு­கின்­ற­னர். இது தொடர்­பில் மக்­கள் பிர­தி­நி­தி­கள் கவ­னம் செலுத்­த­வேண்­டும் என்று அந்­தப் பகுதி மக்­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.

நெடுங்­கேணி வெடுக்­கு­நாறி ஆதி­லிங்­கேஸ்­வ­ரர் கோவி­லுக்­குள் அந்­தப்­ப­குதி மக்­கள் வழி­ப­டு­வ­தற்­குச் செல்­ல­மு­டி­யாது என தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் தடை விதித்­துள்ள நிலை­யில், அது தொடர்­பான வழக்­கு­கள் வவு­னியா நீதி­மன்­றில் விசா­ர­ணை­யில் உள்­ளன.
இந்­த­நி­லை­யில், குறித்த கோவில் பகு­தி­யில் பிர­திஸ்டை செய்­யப்­பட்­டுள்ள இந்து விக்­கி­ர­கங்­க­ளான அம்­மன், முரு­கன் சிலை­கள் காணா­மல் போயுள்­ளன. சில விக்­கி­ர­கங்­கள் உடைத்து அழிக்­கப்­பட்­டுள்­ளன என்று பொது­மக்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.

இந்­த­நி­லை­யில், நேற்­றுக்­காலை தொடக்­கம் கோவி­லை­நோக்கி உழ­வி­யந்­தி­ரங்­க­ளில் பெளத்த தேரர்­கள் அம­ரும் கதிரை உட்­பட பல்­வேறு பொருள்­கள் இரா­ணு­வத்­தி­ன­ரால் எடுத்­துச்­செல்­லப்­ப­டு­கின்­றன. சொகுசு வாக­னங்­க­ளும் உட்­செல்­கின்­றன என்று பொது­மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.ஆதி­லிங்­கேஸ்­வ­ரர் கோவிலை பெளத்த மய­மாக்­கு­வ­தற்­கான செயற்­பா­டு­களை இரா­ணு­வம் மூலம் அரசு முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவே கரு­து­கின்­றோம் என்­றும் அந்­தப்­ப­குதி மக்­கள் குற்­றம் சுமத்­து­கின்­ற­னர்.

எனவே, இது தொடர்­பில் தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள் உடன் நட­வ­டிக்கை எடுக்க முன்­வர வேண்­டும் என்று அந்­தப் பகுதி மக்­கள் கோரிக்கை விடுக்­கின்­ற­னர்.

வவு­னி­யா­வில் கொரோ­னா­வால் ஐந்து பேர் சாவு!

‘ஐ.நா. கடித விவ­கா­ரம்’ விளக்­கம்­கேட்டு 9 பேருக்கும் தமிழ் அர­சுக் கட்சி கடி­தம்!