in ,

முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த அர­சி­யல் கைதி விடு­தலை! ஏரா­ளம் கைதி­கள் இன்­னும் சிறைக்­குள்­ளேயே!

முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த அர­சி­யல் கைதி விடு­தலை! ஏரா­ளம் கைதி­கள்
இன்­னும் சிறைக்­குள்­ளேயே!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தைச் சேர்ந்த அர­சி­யல் கைதி­யான நடேசு குக­நா­தன் கொழும்பு மேல்­நீ­தி­மன்­றால் நேற்று விடு­த­லை­செய்­யப்­பட்­டுள்­ளார்.
முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்பு உடை­யார்கட்­டைச் சேர்ந்த இரண்டு பிள்­ளை­க­ளின் தந்­தை­ விடு­த­லை­செய்­யப்­பட்­டுள்­ளார்.

விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­பி­லி­ருந்த அவர், 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி படை­யி­ன­ரால் கைது­செய்­யப்­பட்டு, மூன்று ஆண்­டு­கள் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்­தார். அவர் மீதான வழக்கு உயர்­நீ­தி­மன்­றில் விசா­ரிக்­கப்­பட்டு வழங்­கப்­பட்ட தீர்ப்­பின் பிர­கா­ரம், 2012ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி தொடக்­கம் ஓர் ஆண்டு புனர்­வாழ்வு பெற்று 2013ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திக­தி­யன்று விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்­தார்.

அதன்­பின்­னர் குடும்­பத்­து­டன் வாழ்ந்­து­வந்த நிலை­யில், 2013ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி அன்று தொலை­பே­சி­மூ­லம் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்டு மீண்­டும் கைது­செய்­யப்­பட்டு பூசா சிறை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தார். பின்­னர் 2015ஆம் ஆண்டு நியூ­ம­க­சின் சிறைச்­சா­லைக்கு மாற்­றப்­பட்டு தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.
தற்­போது நாட்­டில் நில­வும் கொரோனா வைரஸ் தொற்று சில சிறைச்­சா­லை­க­ளுக்­கும் பர­வி­யுள்­ளது. இந்த நோய் தொடர்­பில் பிள்­ளை­க­ளும் தந்­தை­யைப் பற்றி மிகுந்த கவலை தெரி­விக்­கின்­றார்­கள். இந்த நோயில் இருந்து பாது­காப்­ப­தற்­காக ஜனா­தி­பதி கரு­ணை­கூர்ந்து தனது கண­வரை பிணை­யி­லா­வது விடு­தலை செய்­ய­வேண்­டும் என்று தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வ­ரின் மனைவி, கடந்த ஆண்டு கோரிக்கை விடுத்­தி­ருந்­தார்.

இந்­த­நி­லை­யில், 8 ஆண்­டு­கள் கடந்த பின்னர் கொழும்பு நீதி­வான் நீதி­மன்­றால் அவர் நேற்று விடு­த­லை­செய்­யப்­பட்­டுள்­ளார்.
சிறைச்­சா­லை­கள் இரா­ஜாங்க அமைச்­சர், அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லைக்­குச் சென்று, தமிழ் அர­சி­யல் கைதி­களை அச்­சு­றுத்­திய விவ­கா­ரம் பெரும் சிக்­கலை அர­சுக்­குத் தோற்­று­வித்­துள்­ளது. அதன்­தாக்­கம் கார­ண­மாக, அச்­சு­றுத்­தல் விடுத்­தி­ருந்த சிறைச்­சா­லை­கள் இரா­ஜாங்க அமைச்­சர் பதவி வில­கி­யுள்­ளார். இந்­த­நி­லை­யில், குறித்த அர­சி­யல் கைதி மாத்­தி­ரம் நேற்று விடு­த­லை­செய்­யப்­பட்­டுள்­ளார். இன்­னும் ஏரா­ள­மான தமிழ் அர­சி­யல் கைதி­கள் சிறைச்­சா­லை­க­ளில் பல வரு­டங்­க­ளா­கத் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தார் அமைச்சர் நாமல்!

உள்ளூர்த் தயா­ரிப்பு குண்­டு­கள் குட­மி­ய­னில் மீட்பு!