செய்திகள்வவுனியா

நினைவு தூபி இடிப்பு; முடங்கியது வவுனியா!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனுஷ்டிக்கப்படும் ஹர்தால் காரணமாக வவுனியாவும் முற்றாக முடங்கியுள்ளது.

வவுனியா நகரில் சில வியாபார நிலையங்கள் கொரோனா தொற்றுகாரணமாக ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் ஏனைய வியாபார நிலையங்கள் பொதுச்சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

நகரை அண்டிய பகுதிகளான பூந்தோட்டம்,குருமன்காடு கோவில்குளம், போன்ற இடங்களில் அனைத்து வியாபார நிலையங்களும் முழுமையாக மூடப்பட்டிருந்தது.

அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தன.

வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் பொது மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அத்தோடு பாடசாலைகள் நீண்ட இடைவெளிக்கு பின் ஆரம்பிக்கப்பட்ட போதும் மாணவர்களின் வரவு மிக மிக குறைவாக இருந்தமையால் பாடசாலைகளின் செயற்பாடுகளும் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282