in ,

தியாகதீபம் திலீபனுக்கு நேற்று நினைவேந்தல்!

தியாகதீபம் திலீபனுக்கு நேற்று நினைவேந்தல்!

தியாக தீபம் திலீ­ப­னின் (இரா­சையா பார்த்­தீ­பன் ) 34 ஆவது ஆண்டு நினை­வேந்­தல் நிகழ்வு நேற்­று­ நடை­பெற்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, கிளி­நொச்­சி­யில் பிரத்­தி­யே­க­மாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஓர் இடத்­தில் நினை­வேந்­தலை நடத்­தி­யது. அதில் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறீ­த­ரன் உள்­ளிட்ட தரப்­பி­னர் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர் என்று அவ­ரு­டைய கட்­சி­யின் ஊட­கப் பிரிவு குறிப்­பிட்­டது.

யாழ்ப்­பா­ணத்­தில், திலீ­பன் உயிர்­நீத்த, யாழ்ப்­பா­ணம் நல்­லூ­ரின் பின்­வீ­தி­யில் அமைந்­துள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வேந்­தல் தூபி­யில் நினை­வேந்­தல் நடை­பெற்­றது.
தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி இந்த நினை­வேந்­தலை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. கட்­சி­யின் செய­லா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செ.கஜேந்­தி­ரன், கட்­சி­யின் ஊட­கப் பேச்­சா­ளர் க.சுகாஸ் மற்­றும் கட்சி ஆத­ர­வா­ளர்­கள் எனப் பலர் நினை­வேந்­த­லில் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர்.

1987 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் 15ஆம் திகதி ஐந்து அம்­சக் கோரிக்­கை­களை முன்­வைத்து உண்­ணா­வி­ர­தத்தை ஆரம்­பித்த திலீ­பன் 1987ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் 26ஆம் திகதி உயிர்த்தியாகம் செய்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் சி.சி.ரி.வி. வீடியோக்களை அழிக்க முயற்சி!

பட்டதாரி பயிலுநர்களுக்கு 3 மாதங்களுக்குள் நியமனம்!