செய்திகள்மன்னார்

மன்னாரில் இரு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளாதவர்கள் பொது இடங்களில் நடமாடத் தடை!

மன்னாரில் கொரோனாத் தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களில் நடமாடத் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

மன்னாரில் இன்று (15) முதல் சோதனைச்சாவடிகளில்  தடுப்பூசி அட்டைகள்  பரிசோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களில் நடமாடுவதற்கும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். வினோதன் தெரிவித்துள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051