in

காணாமல்போனோர் விவகாரம் மரணச் சான்றிதழ்கள் உடனடித்தீர்வாகுமாம் கோத்தாவுக்கு ஒத்தூதுகிறார் அங்கஜன் இராமநாதன்!

காணாமல்போனோர் விவகாரம் மரணச் சான்றிதழ்கள்
உடனடித்தீர்வாகுமாம் கோத்தாவுக்கு ஒத்தூதுகிறார்
அங்கஜன் இராமநாதன்!

காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதென்பது, அவர்களைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு உடனடித் தீர்மான அமையும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல்போனோர் விடயத்தில் சிலருக்கு இன்னும் எந்தவொரு முடிவும் இல்லாத நிலை காணப்படுகின்றது. நான் நேரில் பார்த்திருக்கின்றேன். சிலர் தங்களின் தாலியைக் கழற்ற முடியாத நிலையில் உள்ளனர். தன் கணவர் இருக்கின்றாரா இல்லையா என்பது தொடர்பில் அவர்களுக்கத் தெரியாத நிலை உள்ளது. அத்தகையோருக்கு ஏதோவொரு முடிவுதேவை. அத்தகையோருக்கு இந்த மரணச் சான்றிதழ்கள் குறைந்தபட்சத் தீர்வை வழங்கும். நிரந்தரத் தீர்வுக்கு பின்னர் அரசு வழிவகை செய்யவேண்டும்.

படிப்படியாகத்தான் தீர்வுகளைப் பெறமுடியும். கிடைக்கச் சாத்தியமில்லாத தீர்வுகளை எதிர்பார்த்திருக்கக் கூடாது. எனவே இந்த மரணச் சான்றிதழ்கள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடி மருந்தாகக்கூடிய வகையில் அமையும் – என்றார்.

முல்லை. மாவட்டச் செயலருக்கு கொரோனாத் தொற்று உறுதி!

அரிசியை விரைவில் இறக்குமதி செய்து அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பதிலடி!விவசாய அமைச்சர் தெரிவிப்பு!