in ,

நாயாற்றுக் காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி! சந்தேகநபர் தப்பியோட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட நாயாற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கசிப்பு உற்பத்தி  அழிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கடந்த 25ஆம் திகதி சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தமது ஆளுகைக்கு உட்பட்ட குறித்த காட்டுப்பகுதியில் கடமையின் நிமித்தம் கண்காணிப்புப் பகுதியில் ஈடுபட்டபோது மேற்படி கசிப்புக் காச்சும் இடம் இனங்காணப்பட்டு அழிக்கப்பட்டது.

அதிகாரிகளைக் கண்டவுடன் சந்தேக நபரொருவர் தப்பியோடியுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சட்ட விரோதமாக மணல் ஏற்றிச்சென்ற வாகனம் பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு!

சிறுவர்கள் பயமின்றி மருத்துவ ஆலோசனையுடன் பைசர் தடுப்பூசியைப் பெறமுடியும்!