செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

யாழ்.மருத்துவமனை வீதியூடாக பேருந்துகள் பயணிக்கத் தடை – யாழ். மாநகர மேயர்  

அனைத்து தனியார் பேருந்துகளும் புதிதாக அமைக்கப்பட்ட தூர சேவைக்கான பேருந்து நிலையத்திலிருந்தே இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளன. அதேவேளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாகவுள்ள வீதியூடாக இலங்கை  போக்குவரத்துச் சபையின் பேருந்துகளோ, தனியார் பேருந்துகளோ பயணிக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் முன்பக்க வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது. அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சகல பேருந்துகளும் மாற்று வழியில் பயணிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை  போக்குவரத்துச் சபையின் பேருந்து தரிப்பிடத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் சத்திரச்சந்தி ஊடாகவே வெளியேற முடியும். மருத்துவமனை வீதி ஊடாகப் பயணிக்க முடியாது. அதேபோன்று எந்தவொரு மார்க்கத்தின்  ஊடாக யாழ்ப்பாணத்துக்கு வரும் தனியார் பேருந்துகளும் மருத்துவமனையின் முன்வீதி ஊடாகப் பயணிக்க முடியாது.

இவற்றை மீறிச் செயற்படும் பேருந்துகளுக்கு எதிராக பொலிஸார் சட்டநடவடிக்கைகள் எடுப்பார்கள்-என்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282