கிளிநொச்சிசெய்திகள்

விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுகாட்டு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் உடுத்துறை வடக்கு தாளையடியை சேர்ந்த நாகேந்திரன் ஜெகன் என்பவர் உயிரிழந்துள்ளார். புதுகாட்டுச்சந்தியிலிருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை மருதங்கேணியிலிருந்து புதுகாட்டு நோக்கி வந்து கொண்டிருந்த கப் ரக வாகனம் மோதியுள்ளது.

மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282