செய்திகள்

கிளிநொச்சியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது!

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் அனுமதிப்பத்திரத்துக்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும், அதன் சாரதிகளும் பொலிஸாரரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 4 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட தடயப்பொருட்களை 29.09.2022 நாளைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

 

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266