in

அரசியல் கைதிகளை அச்சுறுத்திய அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகினார்!

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் இராஜினாமாவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டார்.

அமைச்சு தொடர்பாக ஊடகங்களில் வௌியாகும் தகவல்கள் காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்ப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்ததாக லொஹான் ரத்வத்த தனது இராஜினாமாக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 12ஆம் திகதி அனு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லைக்­குச் சென்ற சிறைச்­சா­லை­கள் மறு­சீ­ர­மைப்பு இரா­ஜாங்க அமைச்­சர் லொகான் ரத்­வத்த, அங்கு தமிழ் அர­சி­யல் கைதி­களை துப்­பாக்கி முனை­யில் முழந்­தா­ளிட வைத்து அச்­சு­றுத்­தல் விடுத்­துள்­ளார்.

முன்­ன­தாக வெலிக்­க­டைச் சிறைச்­சா­லைக்­கும் இவ்­வாறு லொகான் ரத்­வத்த சென்­றுள்­ளார். அதன் தொடர்ச்­சி­யா­கவே அனு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லைக்­குள் சென்று அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்­டுள்­ளார். தனது நண்­பர்­கள் சகி­தமே லொகான் ரத்­வத்த சிறைச்­சா­லைக்­குச் சென்­றி­ருந்­தார் என்­றும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

சந்­தி­ரிகா ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது பிர­திப் பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்த அனு­ருத்த ரத்­வத்­த­வின் மகனே லொகான் ரத்­வத்­த­யா­வார். சந்­தி­ரி­கா­வின் மாமனாரே அனு­ருத்த ரத்­வத்­த­யா­வார். அனு­ருத்த ரத்­வத்த விடு­த­லைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை தீவி­ர­மாக முன்­னெ­டுத்­த­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது

கொரோனாத் தொற்றால் மன்னார் மாவட்டத்தில் 23 பேர் சாவு!

இராஜாங்க அமைச்சரைக் கைது செய்யுமாறு தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தல்!