in

அநுராதபுரம் சிறைச்சாலையில் சி.சி.ரி.வி. வீடியோக்களை அழிக்க முயற்சி!

அநுராதபுரம் சிறைச்சாலையில் சி.சி.ரி.வி. வீடியோக்களை அழிக்க முயற்சி!

“அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் சி.சி.ரி.வி. கம­ரா­வில் பதி­வான காட்­சி­களை அழிப்­ப­தற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. இந்த நட­வ­டிக்­கையை அனு­ம­திக்க முடி­யாது. உரிய சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­குத் தயா­ரா­கவே இருக்­கின்­றோம்.” என்று சிறைக்­கை­தி­க­ளின் உரி­மை­க­ளைப் பாது­காக்­கும் அமைப்­பின் உறுப்­பி­னர் சட்­டத்­த­ரணி சேனக பெரேரா நேற்று தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­விக்­கை­யில்,

“அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லைக்­குள் அத்­து­மீறி நுழைந்­துள்ள இரா­ஜாங்க அமைச்­சர், பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டத்­தின்­கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கைதி­க­ளுள் 8 பேரை முழந்­தா­ளி­ட­வைத்து மிரட்­டி­யுள்­ளார். அவ­ரின் இந்த நட­வ­டிக்கை நீதி­மன்­றத் தீர்ப்­பை­யும் அவ­ம­திக்­கும் செய­லா­கும்.

கைதி­க­ளைப் பார்­வை­யி­டச் செல்­வ­தா­யின் துப்­பாக்­கி­யு­டன் செல்­வ­தற்கு, சிறைச்­சாலை ஆணை­யா­ளர் நாய­கத்­துக்­குக்­கூட அனு­ம­தி­யில்லை. அப்­படி இருக்­கும்­போது இரா­ஜாங்க அமைச்­சர் எவ்­வாறு துப்­பாக்­கி­யு­டன் சென்­றார்?. கைதி­க­ளைப் பார்­வை­யி­டும் சிறப்­பு­ரிமை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இருக்­கின்­றது என்­ப­தற்­காக முறை­யற்ற விதத்­தில் செயற்­ப­ட­மு­டி­யாது. எனவே, இரா­ஜாங்க அமைச்­சர் மட்­டு­மல்ல சிறைச்­சாலை ஆணை­யா­ளர், சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளும் இதற்­குப் பொறுப்­புக் கூற­வேண்­டும்.

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யி­லுள்ள சி.சி.ரி.வி. கம­ராக் காட்­சி­களை அழிப்­ப­தற்­கான முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தா­கத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. அவ்­வா­றான நட­வ­டிக்­கை­யில் அதி­கா­ரி­கள் ஈடு­ப­டக்­கூ­டாது. அதே­போல, இது விட­யத்­தில் உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று கைதி­க­ளின் உற­வி­னர்­கள் எம்­மி­டம் கோரி­யுள்­ள­னர்.
அநு­ரா­த­பு­ரத்­தில் மட்­டு­மல்ல வெலிக்­கடை சிறைச்­சா­லை­யி­லும் அடா­வ­டித்­த­ன­மாக இரா­ஜாங்க அமைச்­சர் செயற்­பட்­டுள்­ளார்.” – என்­றார்.

மூச்சுத் திணறலால் ஆண் குழந்தை சாவு!

தியாகதீபம் திலீபனுக்கு நேற்று நினைவேந்தல்!