உலகச் செய்திகள்செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

தத்தளித்த இலங்கையர்களை மீட்டது ஜப்பானியக் கப்பல்

நடுக்கடலில் 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்த படகை ஜப்பானின் கப்பலொன்று மீட்டு மருத்துவ சிகிச்சைகளை வழங்கியுள்ளது.

கனடாவுக்குள் புகலிடம் தேடி இலங்கையில் இருந்து சென்ற தமிழ் அகதிகள் 306 பேர் நடுக்கடலில் நீண்ட நேரமாக தத்தளித்துக் கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர்.

30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 306 பேருடன் இந்தப்படகு புறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் சிறு பாறையுடன் மோதிய இந்தப் படகு தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ள முடியாது ஒரு கட்டத்தில் படகு மூழ்கும் நிலை ஏற்பட்டு தத்தளித்தது.

இந்த நிலையில் அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த ஜப்பான் கொடியுடனான ஹெலியோஸ் லீடர் என்ற கப்பல் படகில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டுள்ளது.

படகில் இருந்தவர்களை மீட்டு அவர்களுக்கு மருத்துவகிசிச்சைகளை வழங்கியுள்ளது. படகில் உள்ள அகதிகளில் 80 வீதமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பலர் குடும்பத்தினருடனும் சென்றுள்ளார்கள் எனவும் தெரியவருகிறது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266