in ,

மன்னார் மாவட்டத்தில் தடுப்பூசியால் தொற்றுகள், இறப்புகள் குறைவடைகின்றன!

மன்னார் மாவட்டத்தில் தடுப்பூசியால் தொற்றுகள், இறப்புகள் குறைவடைகின்றன!

கொரோனாத் தடுப்பூசிகள் துரித கதியில் ஏற்றப்பட்டதன் காரணத்தால் மன்னார் மாவட்டத்தில் தொற்றுக்களும், இறப்புக்களும் குறைந்து வருகின்றன என்று மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் செப்ரெம்பர் மாதம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் கடந்த மாதத்தோடு ஒப்பிடும்போது இந்த மாதம் குறைவாக காணப்படுகிறது. இதற்கு முதன்மைக் காரணங்களாக எமது தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் வினைத்திறனாக மேற்கொள்ளப்பட்டதுடன், தனிமைப் படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதையும் குறிப்பிடலாம்.

ஓகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 643 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அதாவது ஒருநாளின் சராசரி 20 தொடக்கம் 21ஆகக் காணப்பட்டது. இதில் இந்த மாதம் நேற்று (நேற்றுமுன்தினம்) வரை 351 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். சராசரி 18ஆகக் காணப்படுகின்றது.

ஓகஸ்ட் மாதம் பத்து உயிரிழப்புக்கள் கொரோனாத் தொற்றால் இடம்பெற்றன. இதில் மூன்று நாளைக்கு ஒரு உயிரிழப்பு என்று விகிதத்தில் காணப்படுகிறது. செப்ரெம்பர் மாதத்தில் இது கிட்டதட்ட 5 அல்லது 6 நாளைக்கு ஒரு உயிரிழப்பு என்ற விகிதத்தில் குறைவடைந்து காணப்படுகிறது – என்றார்.

தண்டனையைக் குறைக்குமாறு கூரையில் ஏறி கைதிகள் போராட்டம்!

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்குச் சாத்தியம்!