கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

மது போதையில் குழப்பம்; சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கைது

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையில் குழப்பத்தில் ஈடுபட்ட இருவர் நேற்று (01) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான 23 மற்றும் 28 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

மஹதிவுல்வெவ சிங்கள மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மது அருந்திவிட்டு குழப்பம் செய்ததை அடுத்தே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

போலி நிறுவனத்திற்கு 200 கோடி வழங்கி ஏமாந்த இலங்கை அரசு

G. Pragas

நாமல் எம்பி திருமண பந்தத்தில் இணைந்தார்

G. Pragas

“அமேசன் காடெரிப்பும் புவியில் உயிர்களின் இருப்பும்” கலந்துரையாடல்

G. Pragas

Leave a Comment