செய்திகள் பிராதான செய்தி முல்லைத்தீவு

தாவடியில் தர்மலிங்கத்தின் நினைவேந்தல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 34ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (02) யாழ்ப்பாணம் – தாவடியில் இடமபெற்றது.

தாவடியில் அமைந்துள்ள அமரர் வி.தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் அக்கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன் தலைமையில் அஞ்சலி நிகழ்வும் அஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றது.

இதன்போது அமரர் தர்மலிங்கத்தின் நினைவுத் தூபிக்கு அவரது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் மலர் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நிறைவுத் தூபிக்கு மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீசற்குணராசா, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் லலீசன், முன்னாள் வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, யாழ் மேயர் ஆர்னோல்ட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

யாழ் மாநகரை கம்பீரமாக கட்டியெழுப்புவோம் – பிரதமர்

G. Pragas

வெளிவருகிறது “கலைமுகம்” 68வது இதழ்

G. Pragas

மூவருக்கு மரண தண்டனை!

admin

Leave a Comment