கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

மட்டக்களப்பு சிறையில் இளைஞன் மரணம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவன் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வாழைச்சேனை, சுங்காங்கேணியை சேர்ந்த ரி.கமல்ராஜ் (27-வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் வாழைச்சேனையில் கைகலப்பு ஒன்றிற்காக வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் ஊடாக குறித்த இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

G. Pragas

இன்னொரு ஜனாதிபதி வேட்பாளரும் களமிறங்கினார்!

thadzkan

மூன்றாம் தவணைக்குரிய கல்வி செயற்பாடு நாளை ஆரம்பம்

admin

Leave a Comment