கிழக்கு மாகாணம் செய்திகள்

மாணவர்களது கல்வி முன்னேற்றத்தில் பெற்றோர்கள் கைகோர்க்க வேண்டும்

ஒவ்வொரு பெற்றோருடைய முயற்சியும் கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கைகோர்க்க கூடியதாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.உமர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் இரண்டு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (11) இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரிதிதென்னை தொடக்கம் ஒல்லிக்குளம் வரையான பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு அதனூடாக முஸ்லிம் மாணவர்கள் நலன்பெற வேண்டும் என்றும், எமது பாடசாலைகளில் இணைந்திருக்கும் தமிழ் மாணவர்களும் கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.

பாடசாலைக்கு கட்டடங்கள், தளபாடங்கள், பொருட்கள், ஆசிரியர்கள் மாத்திரம் வந்துவிட்டால் போதாது ஒவ்வொரு பெற்றோருடைய முயற்சியும் இந்த பிரதேசத்தில் இருக்கின்ற மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கைகோர்க்க கூடியதாக இருக்க வேண்டும்.

இந்த பிரதேசத்தில் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத, இஸ்லாமியர்கள் என்ற வகையில் ஏற்றுக் கொள்ள முடியாத பல்வேறு பல குறைபாடுகள் இந்த பிரதேசத்தில் சொல்ல முடியாதவை உள்ளது. எங்களது தகவல்களின் அடிப்படையில் சில பிரதேசங்கள் அவ்வாறான சில விரும்பத்தகாத விடயங்களில் தங்களை நுழைத்துக் கொண்டிருக்கின்ற நிலைமைகள் இருக்கின்றது என்றார்.

பாடசாலை அதிபர் எஸ்.ஐயூப்ஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.அஜ்மீர், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.தையூப், திருமதி.எஸ்.நபீரா, நூரியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் எஸ்.பதூர்தீன், தைக்கா பள்ளிவாசல் தலைவர் செய்து உஸைன் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். (கு)

Related posts

THE PRESIDENTIAL ELECTION’S NOMINATION DATE LIKELY TO BE OUT TODAY.

thadzkan

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல்!

G. Pragas

வந்துரம்ப பகுதி விபத்தில் ஒருவர் பலி

admin

Leave a Comment