கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

அஷ்ரப்பின் 19ம் ஆண்டு நினைவேந்தல்

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 19வது நினைவேந்தல் நிகழ்வு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றது.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சார செயலாளர் ஐ.எம்.ஹாரிப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹசனலி, அதன் தவிசாளர் பஸீர் சேகுதாவூத், பிரதி தலைவர் எஸ்.நிஜாம்தீன் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் மறைந்த தலைவர் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் தொடர்பான நினைவுரைகள் இடம் பெற்றதுடன் விஷேட துஆ பிராத்தனையும் இடம் பெற்றது துஆ பிரத்தனையை மௌலவி எச்.எம்.எம்.ஹனீபா நடாத்தி வைத்தார். (கு)

Related posts

அனைத்து மக்களுக்கும் சம உரிமை! – சஜித்

G. Pragas

சுதந்திர கட்சியின் முடிவு நாளை

G. Pragas

தொழிற்சங்கங்களை நாளை சந்திக்கிறது அமைச்சரவை உப குழு

G. Pragas

Leave a Comment