கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

இ.போ.ச ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சம்பள தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை தொடக்கம் இன்று (17) இரண்டாவது நாளாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் வாழைச்சேனை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக சாலை முன்பாக கூடி நின்று சாலையின் உள்ளே செல்லாமல் தங்களுடைய வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தாங்கள் இரவு பகல் பாராது மக்களுக்கு சேவை செய்யும் எங்களுக்கு 2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மூலம் அதிகரிக்கப்பட்ட இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்காமல் உள்ளது கவலையளிக்கின்றது. எனவே எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தினை உடனடியாக வழங்க வேண்டும். இல்லையேல் எங்களது போராட்டம் தொடரும் என வாழைச்சேனை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கான தீர்வு கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றும் சாலை ஊழியர்கள் தெரிவித்தனர். (கு)

Related posts

கிளிநொச்சி மாணவி தேசிய மட்டத்தில் 2ம் இடம்

G. Pragas

அறிவியல் தமிழ் கருத்தரங்கு

G. Pragas

தமிழர் பகுதியை அபகரிக்கும் ஆரம்ப அடியை வைத்துள்ளார் ஞானசார தேரர்

G. Pragas

Leave a Comment