செய்திகள்

ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊனமுற்ற இராணுவ வீரர்கள் லோட்டஸ் வீதி, பிரதமர் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நுழைய இடைக்கால தடை விதித்து கோட்டை நீதிமன்றம் இன்று (18) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.

வேதன பிரச்சினை மற்றும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து விசேட தேவையுடைய மற்றும் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை கடந்த 10ம் திகதி முதல் கோட்டையில் எட்டாவது நாளாக இடம்பெறுகின்றது.

இந்நிலையிலேயே இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேரர்களின் அராஜகத்தை கண்டித்து நாளை போராட்டம்!

G. Pragas

சிறையில் மரணித்த குடும்பஸ்தர்; தந்தை சந்தேகம்

G. Pragas

விபத்தில் கணவன் – மனைவி பலி!

G. Pragas

Leave a Comment