கிழக்கு மாகாணம் செய்திகள்

பயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை

தேசிய தௌஹீத் ஜமாஅத் பயங்கரவாத இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றஞ்சாட்டின் அடிப்படையில் கைதான நபரை 3 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இன்று (18) கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஆலோசனைக்கு அமைய குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபரை சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வாராந்தம் கையொப்பம் இடுவதுடன் வெளிநாட்டு பயணங்கள் வழக்கு முடிவுறுத்தும் வரை செல்ல முடியாது கடவுச்சீட்டினை நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறும் 3 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிமன்று உத்தரவிட்டது.

இதன் போது குறித்த இவ்வழக்கில் சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணிகளான முபீத் இயாஸ்தீன், சஞ்ஜீத் ஆகியோர் ஆஜராகி தத்தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

மேலும் இச்சந்தேக நபர் கடந்த ஒன்றரை மாதங்களாக தடுப்புக்காவலில் இருந்ததுடன் சவளைக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். (பா.ஷி)

Related posts

சடலத்தை புதைத்த பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்

G. Pragas

THE PRESIDENTIAL ELECTION’S NOMINATION DATE LIKELY TO BE OUT TODAY.

thadzkan

போலி நிறுவனத்திற்கு 200 கோடி வழங்கி ஏமாந்த இலங்கை அரசு

G. Pragas

Leave a Comment