செய்திகள் விளையாட்டு

சிந்துவை திருமணம் செய்து வைக்க கோரி 70 வயது முதியவர் விடாப்பிடி

பட்மிண்டன் உலக சம்பியனான 24 வயதுடைய இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை திருமணம் செய்ய விரும்புவதாக 70 வயதான முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடக்காவிட்டால் பி.வி.சிந்துவை கடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, அண்மையில் உலக சம்பியன் பட்டத்தையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயதான மயில்சாமி என்பவர் பி.சி.சிந்துவை தான் திருமணம் செய்ய விரும்புவதாக ராமநாதபரம் மாவட்ட கலெக்டரிடம் மனுவொன்றையும் மயில்சாமி சமர்ப்பித்துள்ளார்.

பி.வி.சிந்துவின் விளையாட்டுத்துறை வாழ்க்கையின் முன்னேற்றம் தன்னை கவர்ந்துள்ளதுடன், சிந்துவை தான் திருமணம் செய்ய விரும்புவதாக மேற்படி மனுவில் மயில்சாமி தெரிவித்துள்ளார்.

Related posts

பாணின் விலையும் உயர்ந்தது!

G. Pragas

திடீரென பற்றி எரிந்த முச்சக்ர வண்டி

G. Pragas

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு புதிய குழு நியமனம்

G. Pragas

Leave a Comment