செய்திகள்

நிஷங்க – தில்ருக்சி உரையாடல் குறித்து நீதி அமைச்சு விசாரணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக்சி டயஸ் தொலைப்பேசி உரையாடலில் தெரிவித்த கருத்து தொடர்பில் சட்டமா அதிபர் அறிக்கை ஒன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

தில்ருக்சி டயஸ் இலஞ்ச ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளராக செயற்பட்ட காலப்பகுதியில் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியுடன் மேற்கொண்ட தொலைப்பேசி உரையாடல் ஒன்றை நிஷங்க சேனாதிபதி தனது பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார்.

அந்த உரையாடலில், அவன் கார்ட் வழக்கு அரசியல் நோக்கத்திற்காக தொடுக்கப்பட்ட வழக்கு என்றும், அதில் கோட்டாபயவை இணைத்தது கவலைக்குரிய விடயம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீதி அமைச்சு அதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதற்காகவே அறிக்கையும் கோரப்பட்டுள்ளது.

Related posts

300 மில்லியனில் பலாலியில் விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம்!

G. Pragas

தில்ருக்ஷியின் சொலிசிட்டர் ஜெனரல் பதவி பறிக்கப்பட்டது!

G. Pragas

உடற்பயிற்சி போட்டியில் வட மாகாணத்திற்கு 3 பதக்கங்கள்!

G. Pragas

Leave a Comment