செய்திகள் வணிகம் விளையாட்டு

இலங்கை பெண்கள் அணி தோல்வி

இலங்கை பெண்கள் அணிக்கும் அவுஸ்திரேலிய பெண்கள் அணிக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெற்றது.

இப் போட்டியில் அவுஸ்திரேலிய பெண்கள் அணி 9 விக்கெட்டுக்களால் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இதன் போது இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதேவேளை 85 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய பெண்கள் அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

Related posts

சஜித் பேரணியில் திரண்ட மக்கள்!

G. Pragas

பகிடிவதையில் ஈடுபட்ட 19 பேருக்கு மீண்டும் மறியல்

G. Pragas

கட்டுப்பணம் செலுத்தினார் பஷீர்

G. Pragas

Leave a Comment