செய்திகள் பிராதான செய்தி

தேர்தல் பிரச்சாரத்தில் இன்று இறங்குகிறார் கோத்தா

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டும் பிரதான தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று (09) அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.

அநுராதபுரம் சல்காடோ மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகும் பரப்புரைக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் பங்காளிக்கட்சி தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தொகுதி வாரீயாக 138 பிரசாரக் கூட்டங்களிலும், 26 பிரதானக் கூட்டங்களிலும் கோத்தாபய ராஜபக்ச பங்கேற்பார் என அவரது பிரசார அணி கூறியுள்ளது.

Related posts

உத்தியோகபூர்வமாக யாழ் வந்து சென்றது அலையன்ஸ் விமானம்

G. Pragas

மாணவர்களது கல்வி முன்னேற்றத்தில் பெற்றோர்கள் கைகோர்க்க வேண்டும்

G. Pragas

தேரரின் உடல் குறித்த தீர்ப்பு சற்று நேரத்தில்; ஞானசாரவும் வருகை

G. Pragas

Leave a Comment