செய்திகள் பிராதான செய்தி

பதவியேற்றதும் போர் வீரர்களுக்கு விடுதலை!

பொய்க் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போர் வீரர்கள் அனைவரையும் பதவியேற்ற மறுநாள் விடுதலை செய்வேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இடம்பெறும் பிரச்சாரக் கூட்டத்தில் சற்றுமுன் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

அன்று நாட்டை மீட்ட ஒருவனான என்னை இன்று ஆமிக்காரன் என்கின்றனர். போர் நடந்த போது இரவில் நித்திரை கொள்ளாத மக்கள் அவற்றை மறந்துவிடமாட்டார்கள். அப்போது ஆமிக்காரன் நல்லவன். இப்போது கூடாதா?.

விவசாயிகளுக்கு 350 ரூபாய் பெறாமல் இலவச உரம் வழங்குவேன். அனைத்து விவசாயக் கடன்களும் இரத்துச் செய்யப்படும். – என்றார்.

Related posts

யாழ் விமான நிலையம்; அரசியல் நடவடிக்கை குறித்து எச்சரிக்கை

G. Pragas

தாயை கொன்று பொலிஸாரை ஏமாற்றி தப்ப முயன்ற குடும்பம்!

G. Pragas

தமிழ் தேசிய கட்சிகள் இடையிலான கலந்துரையாடல்; இணக்கமில்லை!

G. Pragas

Leave a Comment