செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

இரும்பக உரிமையாளர் கொலை! சந்தேக நபர் விடுதலை

கோண்டாவில் உப்புமடச் சந்தி இரும்பக உரிமையாளரைத் தாக்கி, கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முதலாவது சந்தேக நபர் வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (11) யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அவர் மீது போதிய ஆதரங்கள் இல்லாத நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

எனினும் குறித்த சந்தேக நபருக்கெதிராக கொக்குவில் ரயில் நிலைய அதிபரைத் தாக்கிய குற்றச்சாட்டை முன்வைத்து மற்றொரு வழக்கை யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன், இரும்பக உரிமையாளரது கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மற்றொரு இளைஞன், எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

அறநெறிப் பாடசாலைகளின் கௌரவிப்பு விழா!

G. Pragas

சஜித், மனோவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு

G. Pragas

விவசாயிகளின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு!

G. Pragas

Leave a Comment