செய்திகள் பிராதான செய்தி

ஒரு கோடி 70 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்கள் அச்சிட முடிவு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்காணி லியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி முறைப்படுத்தி, தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரச அச்சக திணைக்களத்திடம் கையளித்திருந்தது.

இதற்கமைய, ஒரு கோடியே 70 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படவுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் அயர்ன்மான்

G. Pragas

ஒற்றையாட்சி விவகாரம்; சுமந்திரனுக்கு எதிராக முறைப்பாடு

G. Pragas

“நாங்களும் இருக்கிறம்” ஆவணப்படத் திரையிடல்

G. Pragas

Leave a Comment