செய்திகள் பிரதான செய்தி

மதுபானம் அருந்துவதால் அதிகரிக்கும் கொரோனா…!

புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துவதை தவிர்ந்து கொள்ளுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துவதின் ஊடாக கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் புகைத்தல் மற்றும் மது அருந்துவதை தடுப்பதற்கான நடவடிக்கைளை எடுக்குமாறு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன், நாட்டிலுள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மஹரகமை புற்றுநோய் வைத்தியசாலைகளுக்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தென்னிலங்கை அபிவிருத்திக்கு துணைபுரியும் மத்தள விமான நிலையம்

Tharani

தேரர்களின் அராஜகத்தை கண்டித்து நாளை போராட்டம்!

G. Pragas

இன்றைய நாள் ராசி பலன்கள் (3/3) – உங்களுக்கு எப்படி?

Bavan

Leave a Comment