இன்றையதினம், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று அளவுக்கு அதாகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏ-9 வீதி, முகமாலை பகுதியில் போக்குவரத்தில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அதிக வருமானத்தை பெறுவதற்காக, போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அதிகளவான பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆபத்தான முறையில் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக அரச பேருந்துகள் சேவை நோக்கில் தமது பணியினை செய்வதனை முழுமையாக விட்டு விட்டு இலாப நோக்குடன் செயற்படுவதால் தற்போது பயணிகள் இவ்வாறன பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறான செயற்பாடுகளால் தான் பாரியளவு விபத்துக்கள் ஏற்படுகின்றதாகவும், இதனை கவனத்தில் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.