உலகின் நம்பர் வன் வீரரான ஜானிக் சின்னர், டெய்லர் ஃபிரிட்ஸைத் தோற்கடித்து, அமெரிக்க ஓபன் பட்டத்தை தனதாக்கியுள்ளார்.
இத்தாலியின் 23 வயது வீரர் இந்த ஆண்டு வெற்றியீட்டிய இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
ஜனவரி மாதம் நடந்த அவுஸ்திரேலிய ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற சின்னர், அமெரிக்க 12 ஆவது நிலை வீரரை நியோர்க்கில் ஆர்தர் ஆஷ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் 6-3 6-4 7-5 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
மார்ச் மாதத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளுக்கு இரண்டு முறை நேர்மறை சோதனை செய்த பின்னர் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது தெரியவந்த 19 நாட்களுக்குப் பின்னர் இந்த வெற்றி வந்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.