அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய கால அவகாசம் எதிர்வரும் 9ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்னர் இலங்கைக்கு சலுகை கிடைக்கக்கூடியவாறு அவரால் அறிவிக்கப்பட்ட வரிக்கொள்கைகளில் திருத்தங்களை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த வரிக்கொள்கையால் இலங்கை மட்டுமன்றி முழு உலகமும் திகைப்படைந்தது. இதுதொடர்பில் பேச்சு வார்த்தைகளை முன்னெடுப்பதற்கு 90 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்காக நிதி அமைச்சின் தலையீட்டுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. எதிர்வரும் 9ஆம் திகதியுடன் அந்தக்கால அவகாசம் நிறைவடைகிறது. அதற்கு முன்னர் இலங்கை நிவாரணமொன்று கிடைக்கக் கூடிய நிலைமையை அடைய முடியும் என எதிர்பார்க்கின்றோம் - என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.