அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டில் இருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்ற நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானமை தெரியவந்துள்ளது.
தற்போதைய விசாரணைகளில், தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.