இந்த வாரம் ஆப்பிரிக்காவில் இருந்து கேனரி தீவுகளுக்கு பயணித்த நெரிசலான படகில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததாக ஸ்பெயின் கடலோர காவல்படையினர் புதன்கிழமை (08) தெரிவித்துள்ளனர்.
நெரிசலான படகில் புதிதாகப் பிறந்த குழந்தை, அதன் தாய் மற்றும் படகில் பயணித்த பல குடியேறியவாசிகளின் படத்தையும் ஸ்பெயின் கடலோர காவல்படை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 6 ஆம் திகதி லான்சரோட் தீவில் படகு முதலில் காணப்பட்டது.
ஸ்பெயின் கடலோர காவல்படை குறித்த படகினை வந்து சோதனையிட்ட போது, அதில் தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதைக் கண்டனர்.
படகில் 14 பெண்கள், நான்கு குழந்தைகள் உட்பட மொத்தம் 60 பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், மருத்துவ ஆலோசனையின் கீழ் புததாக பிறந்த குழந்தையும் அதன் தாயும் ஹெலிகொப்டர் மூலம் லான்சரோட்டில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வேறு எதுவும் சிக்கல்கள் அங்கு ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
ஆப்பிரிக்காவில் இருந்து கேனரி தீவுகளுக்கு அட்லாண்டிக் கடல் கடந்து செல்வது மிகவும் ஆபத்தானது.
46,800 க்கும் மேற்பட்ட ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் கடந்த ஆண்டு தீவுகளை அடைவதற்கான பயணத்தை மேற்கொண்டதாகவும் ஸ்பெய்ன் அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.