இந்தியாவிலிருந்து எடுத்துவரப்பட்ட முருகன், வள்ளி, தெய்வானை சமேதர விக்கிரகங்கள் வழிபாட்டுக்காக கதிர்காமத்தில் கடந்த சனிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இந்த விக்கிரகங்கள் தஞ்சாவூரில் வடிவமைக்கப்பட்டு தமிழ்நாடு, காஞ்சி மற்றும் ஆறுபடை வீடுகளில் பூஜை நடத்தப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. யாழ்ப்பாணத்தில் உள்ள மாவைக்கந்தன் ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டு
கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி மாவிட்டபுரத்திலிருந்து புறப்பட்ட முருகப்பெருமான் வன்னிப் பெருநிலப்பரபினூடாகத் திருக்கேதீஸ்வரம் சென்றடைந்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதைத்தொடர்ந்து மட்டக்களப்புக்குச் சென்றடைந்து அங்கு பிரசித்தபெற்ற முருகன் ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று பாணந்துறை, களுத்துறை மற்றும் காலியில் உள்ள முருகன் கோயில்களில் பூஜைகளுடன் கதிர்காமத்துக்குச் சென்றடைந்தார். அங்கு முருகப்பெருமானை மகாநாயக்கர்கள் வரவேற்று பிரதிஷ்டை செய்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.