இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஜூன் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள அதன் உயர் கவுன்சில் கூட்டத்தில், வெற்றி கொண்டாட்டங்கள் தொடர்பான இந்திய பிரீமியர் லீக் உரிமையாளர்களுக்கான விதிமுறைகளை உருவாக்குவது குறித்து விவாதிக்க உள்ளது.
ஜூன் 4ஆம் திகதி அன்று பெங்களூருவில் நடந்த ரோயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த விடயம் தீர்மானிக்கப்படவுள்ளது.
எம். சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்த தவறான நிர்வாகத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்னதாகக் கண்டித்திருந்தது.
அங்கு ஆயிரக்கணக்கானோர் பெங்களூர் அணியின் முதல் ஐ.பி.எல் பட்டத்தைக் கொண்டாட கூடியிருந்தனர்.எனினும், பெங்களூருவில் நடைபெறும் நிகழ்வை ஏற்பாடு செய்வதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறி, இந்த சம்பவத்திலிருந்து வாரியம் தன்னை விலக்கிக் கொண்டது.
கர்நாடக அரசு, பெங்களூர் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியவை இந்த நிகழ்வின் மோசமான திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் குறித்து விமர்சனங்களை எதிர்கொண்டன. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 10 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்குவதாக பெங்களூர் அறிவித்தது. ஜூன் 6 ஆம் திகதி, இந்த சம்பவம் தொடர்பாக ரோயல் சேலஞ்சர்ஸ் அணி உரிமையாளரின் சந்தைப்படுத்தல் தலைவர் நிகில் சோசலே கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Получить психологическую помощь Запись на платный прием к психологу 489
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.