நமக்குத் தெரிந்ததெல்லாம் வருடத்தில் ஒருமுறை கொலு வைத்து கொண்டாடப்படும் நவராத்திரி மட்டும்தான். ஆனால் ஒரு வருடத்துக்கு நான்கு நவராத்திரிகள் இடம் பெறுகின்றன. வராகி நவராத்திரி, சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி, இதனை விட நம் எல்லோராலும் கொண்டாடப்படுகின்ற கொலு நவராத்திரி. இதில் இன்றைய தினம் ஆரம்பிக்கும் நவராத்திரி தான் வசந்த நவராத்திரி. அதாவது பங்குனி மாதஅமாவாசை திதி முடிந்த பின்னர் மறுநாள் பிரதமை திதியிலிருந்து இந்த வசந்த நவராத்திரி தினம் ஆரம்பிக்கின்றது. இந்த நவராத்திரியில் பெண்கள் அம்பாள் வழிபாடு செய்வதால் குடும்பத்தில் சுபிட்சம் நிறைவாக இருக்கும் என்பது நம்பிக்கை.
இந் நவராத்திரி இராமருக்கும் லலிதாம்பிகைக்கும் சிறப்புக்குரிய நாட்களாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நவராத்திரி முடியக்கூடிய அந்த நாள் தான் ஸ்ரீ இராமநவமி. இந்த நவராத்திரியை மேருசக்கரம் இருக்கக்கூடிய அம்பாள் கோவிலில் இந்த வழிபாடு மிகவும் சிறப்பாக இடம்பெறும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் மாலை நேரத்தில் பூஜையறையை சுத்தம் செய்து அம்பாள் படத்துக்கு அலங்காரம் செய்து லலிதா திரிபுரசுந்தரி திரு உருவப்படம் இருந்தால் சிறப்பு. இல்லாதவர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் அம்பாளை அலங்காரம் செய்து அந்த அம்பாளுக்கு வாசம் நிறைந்த மல்லிகைப்பூ மற்றும் நறுமணம் மிகு மரிக்கொழுந்து போன்றவற்றால் அலங்கரிப்பது இந்த அம்பாள் வழிபாட்டுக்கு மிகவும் சிறப்புக்குரியது. ஆகவே இந்த இரண்டு மலர்களையும் அம்பாளுக்கு சூட்டி விளக்கு ஏற்றி வைத்து உங்களால் முடிந்த நிவேதியம் வைத்து விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்துகொண்டு தீப தூப ஆராதனை செய்து வழிபாட்டை நிறைவு செய்யலாம்.
இதே போல தொடந்து 9 நாட்களும் வழிபட்டல் வேண்டும்எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி வரை இந்த நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த பூஜை செய்யும் போது வீட்டில் லலிதா சகஸ்ர நாமத்தை ஒலிக்க விடுங்கள். இந்த வழிபாடு உங்களுக்கு மன நிம்மதியை கொடுப்பதோடு வீட்டில் சந்தோஷத்தையும் செல்வ கடாட்சத்தை கொடுக்கும். லலிதாம்பிகையின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற இந்த ஒன்பது நாட்களை தவற விடாது வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.