இன்றைய ராசி பலன்
மேஷம்:
மேஷ ராசி நன்பர்களே
ஒரேநாளில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். அவசர முடிவுகளை தவிர்ப்பது மிக மிக நல்லது. அலைச்சலும் மனக்கலக்கமும் அதிகரிக்கும். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாள். நற்பலன் அதிகரிக்கும்.
இடபம்:
இடப ராசி நன்பர்களே
திடீர் பயணங்கள் மற்றும் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களால் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். போராடி வெல்லும் நாள் வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசி நன்பர்களே
பெற்றோரின் ஆதரவு பெருகும். மற்றவர்களுக்காக சில செலவுகளைச் செய்து பெருமைப்படுவீர்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள்.
கடகம்:
கடக ராசி நன்பர்களே
எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். எதிர்பாராத ஆதாயமும் உண்டாகும். புதிய முயற்சியை தொடங்குவது நல்லது. பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசி நன்பர்களே
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயற்படுவீர்கள், உறவினர் நண்பர்களால் அனு கூலம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நன்மை நடக்கும் நாள். சிரமங்கள் பெரிதும் குறையும்.
கன்னி :
கன்னி ராசி நன்பர்களே
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். நெளிவு சுழிவு களை கற்றுக் கொள்வீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
துலாம்:
துலாம் ராசி நன்பர்களே
செலவுகள் அதிகமாகும்.அநாவசியமாக அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். போட்டிகள் அதிகரிக்கும். மறைமுக விமர்சனம் நீங்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நன்பர்களே
தன்பலம் பலவீனத்தை உணர்வீர்கள். ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
தனுசு:
தனுசு ராசி நன்பர்களே
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலத்திட்டத்தில் ஒன்று நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் பெருகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
மகரம்:
மகர ராசி நன்பர்களே
எதிர்ப்புகள் அடங்கும். தாய் வழி உறவி னர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக்கொள்வார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
கும்பம்:
கும்ப ராசி நன்பர்களே
உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். சிலர்உங்கள் உதவியை நாடுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.
மீனம்:
மீன ராசி நன்பர்களே
அழகும் இளமையும் கூடும். வெளிவட்டா ரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனசாட்சிபடி செயற்படும் நாள்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.