(புதியவன்)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந்த் வியாஸ்காந், இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கவுள்ளார்.
நடைபெற்று வருகின்ற இந்தியன் பிரீமியர் லீக் 2024 (IPL - ஐ பி எல்) தொடரில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இன்று வியாஸ்காந் விளையாடவுள்ளார்.
வனிந்து ஹசரங்கா தனது இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ பி எல் 2024ல் பங்கேற்கவில்லை. அவருக்கு மாற்றீடாகவே வியாஸ்காந் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2020 இல் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக்கில், யப்னா ஸ்டாலியன்ஸின் சார்பில் விஜயகாந்த் வியாஸ்காந் பங்கேற்றார்.
இதற்கு முன்னர் வியாஸ்காந் இந்தியன் பிரீமியர் லீக் 2023 சீசனுக்கான நெட் பவுலராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.