மேடம்: எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை மறுப்பின்றி வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவிகேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
இடபம்: வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்.
மிதுனம்: மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். உறவினர்களால் ஓரளவு அனு கூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்சினை களும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம்.
கடகம்: தந்தையின் தேவையை நிறைவேற்று வீர்கள். பிள்ளைகளால் பிரச்சினை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
சிம்மம்: உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.
கன்னி: இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளை களுக்காக செலவு செய்ய நேரிடும்.
துலாம்: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.
விருச்சிகம் : எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.
தனுசு: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபட வேண் டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.
மகரம்: தேவையான பணம் கையில் இருந் தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாகச் செல்லவும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
கும்பம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயற்படுவார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் விஷயத்தில் சிந்தித்து ஈடுபடவும்.
மீனம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.