மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடும், ஆற்றலோடும் காணப்படுவீர்கள். உங்களுடைய தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். இதன் மூலமாக புதிய வாய்ப்புகளை தைரியமாக சந்திப்பீர்கள். உங்களுடைய யோசனைகள் தெளிவாக இருக்கும். இலக்குகளை நோக்கி முன்னேறுவீர்கள்.அதிர்ஷ்ட எண்: 4அதிர்ஷ்ட நிறம்: நீலம்
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு சவாலான நாளாக இருக்கும். சமூக உறவில் ஒரு சில பதற்றங்கள் நிலவ வாய்ப்புகள் உள்ளது. இன்று சிறு சிறு வாக்குவாதங்கள் காரணமாக உங்களுடைய மனநிலை பாதிக்கப்படலாம். எனினும் அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பது நல்லது. இந்த சவாலான சமயத்தில் சமநிலையை பராமரிப்பது மிகவும் அவசியம்.அதிர்ஷ்ட எண்: 16அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மிதுனம்
இன்றைய நாள் மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரு அற்புதமான நாளாக இருக்கும். உங்களுடைய யோசனை மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் பயனுள்ளதாக அமையும். குடும்பம் மற்றும் நண்பர்களோடு நேரம் செலவு செய்வது உங்களுடைய புத்துணர்ச்சியை அதிகரிக்கும். உங்களுடைய தகவல் தொடர்பு திறன்கள் இன்று சிறந்த முறையில் உங்களுக்கு பயன்படும்.அதிர்ஷ்ட எண்: 8அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சவாலான நாளாக இருக்கும். இதனால் ஒரு விதமான எரிச்சல் உணர்வு உங்களை சூழலாம். உங்களுடைய யோசனைகளில் கவனம் செலுத்துங்கள். மனதிற்கு பிடித்தவர்களோடு நேரம் செலவு செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். எல்லா சமயத்திலும் பொறுமை காக்க வேண்டியது அவசியம். உங்களுடைய யோசனைகளை தெளிவாக பிறரிடம் வெளிப்படுத்துங்கள்.அதிர்ஷ்ட எண்: 12அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
சிம்மம்
இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு சவாலான நாளாக இருக்கும். உங்களை சுற்றி பதட்டமான சூழல் நிலவும். இதனால் மன அழுத்தத்தோடு காணப்படுவீர்கள். மனதில் ஏதாவது ஒரு யோசனை ஓடிக்கொண்டே இருக்கலாம். எனினும் உங்களுடைய யோசனைகள் மற்றும் உணர்வுகள் குறித்து மனதிற்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்த தயங்காதீர்கள். உறவுகளுக்குள் ஒரு சில பிரச்சனைகள் வரலாம்.அதிர்ஷ்ட எண்: 7அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உங்களுடைய யோசனைகளையும், உணர்வுகளையும் பிறர் புரிந்து கொள்வார்கள். உங்கள் முயற்சிகளை நண்பர்களும் குடும்பத்தாரும் பாராட்டுவார்கள். மனதிற்கு நெருக்கமானவர்களோடு உங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்ள நினைத்தால், இன்று அதை செய்வதற்கான சிறந்த நாள்.அதிர்ஷ்ட எண்: 3அதிர்ஷ்ட நிறம்: நேவி ப்ளூ
துலாம்
இன்றைய நாள் துலாம் ராசிக்காரர்களுக்கு வெற்றியை தேடி தரும். மன நிம்மதி கிடைக்கும். புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள். பழைய கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். உங்களுடைய யோசனைகளையும், வழிகாட்டுதலையும் பிறர் ஏற்றுக் கொள்வார்கள். தைரியமாக இருந்து தன்னம்பிக்கையோடு இலக்குகளை நோக்கி முன்னேறுங்கள்.அதிர்ஷ்ட எண்: 11அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
விருச்சிகம்
விருச்சிக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் சவாலான நாளாக இருக்கும். உறவுகளுக்குள் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படலாம். பிறருடன் பேசும் போது எச்சரிக்கையை கையாளவும். பழைய பிரச்சினை ஒன்று மீண்டும் வெளிச்சத்திற்கு வரலாம். எதிர்மறையான உணர்வுகளை கையாள வேண்டிய சரியான நேரம் இது. மனதிற்கு நெருக்கமானவர்களிடமிருந்து விலகி செல்வதற்கு பதிலாக அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.அதிர்ஷ்ட எண்: 6அதிர்ஷ்ட நிறம்: பிங்க்
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று தனித்துவமான சில அனுபவங்களை பெறுவீர்கள். உங்களுடைய மனநிலை சீரற்ற நிலையில் இருக்கலாம். இது உறவுகளை பாதிக்கும். பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நண்பர்கள் அல்லது மனதிற்கு நெருக்கமானவர்கள் உங்களிடமிருந்து விலகி செல்வது போல உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இது தற்காலிகமானது. மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச ஆரம்பிக்கும் போது சூழ்நிலை மேம்படும்.அதிர்ஷ்ட எண்: 2அதிர்ஷ்ட நிறம்: ஊதா
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு நேர்மறையான நாளாக இருக்கும். உங்களுக்குள் இருக்கும் நேர்மறையான ஆற்றல் பிறருக்கு ஊக்கமளிக்கக் கூடியதாக இருக்கும். குடும்பம் மற்றும் நண்பர்களோடு நேரத்தை செலவு செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கு இது சரியான நேரம். வாழ்க்கையில் அனைத்து அங்கங்களிலும் திருப்தி பெறுவதற்கு இன்று சிறப்பு வாய்ப்பு கிடைக்கும்.அதிர்ஷ்ட எண்: 15அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஊக்கமளிக்கும் ஒரு நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகளும் அனுபவங்களும் தோன்றும். சமூக வாழ்க்கையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பம் மற்றும் நண்பர்களோடு நேரத்தை செலவு செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய யோசனைகளையும், உணர்வுகளையும் மனதிற்கு நெருக்கமானவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.அதிர்ஷ்ட எண்: 5அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு சில சவால்கள் தோன்றும். உறவுகளுக்குள் ஒரு சில மாற்றங்கள் அல்லது பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உறவுகளில் கவனம் செலுத்துவதற்கான சரியான நேரம் இது. குடும்பம் அல்லது நண்பர்களோடு பேசும்போது வார்த்தைகளை எச்சரிக்கையாக கையாள வேண்டும். இல்லை என்றால் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் உருவாகலாம்.அதிர்ஷ்ட எண்: 9அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.