இன்றைய ராசிபலன் - 06 ஜூன் 2024
இன்றைய ராசிபலன் - 06 ஜூன் 2024

மேஷம்: இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

ரிஷபம்: மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. தாமதித்த பணம் கைக்கு வரும். வழக்கில் திருப்பம் நிகழும். உங்கள் வங்கி கணக்கு உயரும். வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். சேமிப்பில் கவனம் தேவை. வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்.

மிதுனம்: பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். தம்பதிகளிடையே மகிழ்ச்சி பொங்கும். இரும்பு வியாபாரம் வருவாயை அதிகரிக்கும்.கணினி துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெண்கள் வீட்டுச்செலவினை சமாளிப்பர்.

கடகம்:தன்னம்பிக்கை மிளிரும். மூத்த அதிகாரிகள் பாராட்டுவர். பெரியவர்களிடம் பணிவு தேவை. அண்டை வீட்டார்கள் உதவுவர். பணத்தட்டுப்பாடு நீங்கும். எதிர்பாராத நன்மைகள் கிட்டும். எடுத்த காரியம் வெற்றியடையும்.

 

சிம்மம்:மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. தம்பதிகளிடையே நல்ல புரிதல் உருவாகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். முதுகு தண்டில் வலி வந்துப் போகும்.

கன்னி:பணப்பொறுப்புக்களை கையாள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டினை விற்ற பணத்தை கொண்டு புதிய சொத்தினை வாங்குவீர்கள். மகன் சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும். தம்பதிகளின் அன்யோன்யம் கூடும்.பூர்வீக சொத்தில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும்.

துலாம்: அழகு நிலையங்கள் ஆரம்பிக்க திட்டமிடுவீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை இருப்பர். வியாபாரம் செழிப்புறும். உடல் நலம் சிறக்கும். மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பெண்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவர்.

விருச்சிகம்: வரவேண்டிய பணம் இன்று வசூலாகும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும்.

 

தனுசு: எதிரிகள் சரணடைவர். பங்குச் சந்தையில் சற்று கூடுதல் கவணம் தேவை. பத்திரிகையாளர்கள் பயன் பெறுவர். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள்.பல கிளைகள் துவங்க திட்டமிடுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். பல காரியங்கள் நிறைவேறும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

மகரம்: மாணவர்கள் திறன் கூடும். உடல் வலி நீங்கும். கணவரிடம் அனுசரிப்பது நல்லது. பணம் பாக்கெட்டை நிரப்பும். செல்வாக்கு பெருகும். வீட்டை புதுப்பிப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சிறப்பாகும். பிரிந்தவர் ஒன்று சேருவர். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும்.

கும்பம்: வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கித் தருவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மீனம்: வாகன பராமரிப்பு செலவு சற்று அதிகமாகும். கவனமுடன் வாகனத்தை பயன்படுத்துவது நல்லது. கால், கை மூட்டுகளில் தேய்மானம் ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர்.

103 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.