மேடம்: புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்திலும் அக்கறை அவசியம். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும்.
இடபம்: பல வகைகளிலும் அனுகூலமான நாள். செயல்கள் எதிர்பார்த்தபடி நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
மிதுனம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் பணவரவு ஏற்பட வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
கடகம்: தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் சாதகமாகும். உறவுகளால் செலவுகள் ஏற்படும். ஆதாயம் கிடைக்கும். உறவினர்களால் செலவுகளுக்கு வாய்ப்பு உள்ளது.
சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
கன்னி: புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது உரிய கவனம் தேவை. வழக்கமான பணிகளிலும் எச்சரிக்கை அவசியம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
துலாம்: பொறுமையுடன் செயற் பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.. குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும்.
விருச்சிகம்: தொடங்கும் காரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். மறைமுக எதிர்ப்பு நீங்கும்.
தனுசு: சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயற் படுவீர்கள். குடும்பம் தொடர்பான பிரச்சினை ஒன்றில் வாழ்க்கைத் துணை உங்களுடைய ஆலோசனையைக் கேட்டு வருவார். பிள்ளைகளால் -பெருமை உண்டாகும்.
மகரம்: செயல்கள் அனுகூலமாகும் நல்ல நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். சங்கடங்கள் ஏற்படும்.
கும்பம்: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கியமான முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆதாயம் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும்.
மீனம்: சோர்வு நிறைந்திருக்கும். புதிய முயற்சிகளை தொடங்குவது நல்லது. தேவை யைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.