மேடம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். தந்தை வழி உறவினர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும்.
இடபம்: செயல்கள் அனுகூலமாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.
மிதுனம்; எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயற்படுவார்கள். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும்.
கடகம்: உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு
சிம்மம்: குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
கன்னி: தேவையான பணம் கிடைக்கும். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
துலாம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், குடும்பம் தொடர்பான முக்கியமான முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். தக்க முன்னெச்சரிக்கை அவசியம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.
விருச்சிகம் : சகோதர வகையில் எதிர்பார்த்து இழுபறியாக இருந்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும்.
தனுசு: முக்கியமான முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்சினை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம்.
மகரம்: தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செயற்படுவீர்கள், தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும் வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும்.
கும்பம்: இன்று நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடிவதுடன், அதனால் எதிர்பார்த்த ஆதாயமும் கூடுதலாகக் கிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மீனம் காரியங்கள் அனுகலமாக முடியும் அதிகப்படியான செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுங்கள், தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் குடும்பம் தொடர்பான முக்கியமான முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.