மேஷம்: ஆடம்பரச் செலவுகள் செய்யாதீர்கள். சிக்கனமாக இருந்து கடன்களை கட்டுவீர்கள். வேலையிடத்தில் உணர்ச்சிவசப்படாதீர். வியாபாரத்தைக் கண்ணும் கருத்துமாக நடத்துவீர்கள். காதலியிடம் கூட கஞ்சத்தனமாக நடந்து கொள்வீர்கள். மேலதிகாரியிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். வேலை அமைந்தாலும் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள்.
ரிஷபம்: எவ்வளவுதான் பக்குவமாக நடந்தாலும் பணத்தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவீர்கள். வாகனங்கள் ஓட்டும்போது கவனத்தைச் சிதற விடாதீர்கள். எதிலும் தலையிடாமல் மரியாதையை காப்பாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சரிவை சந்திப்பீர்கள். வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட தாயாரை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள்.
மிதுனம்: அனைத்துவிதமான குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். நவீனமான பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டு தேவையற்ற நெருக்கடியை தவிர்ப்பீர்கள். இயற்கை உணவுகளை உட்கொள்ள விரும்புவீர்கள். எந்தக் காரியத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் நல்ல பலன் பெறுவீர்கள்.
கடகம்: வியாபாரத்தை செழிப்பாக நடத்துவீர்கள். பங்குச்சந்தையில் நல்ல வருமானம் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் நண்பர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். காதலியோடு இருந்த கருத்து வேறுபாட்டை தீர்ப்பீர்கள். பணியினால் ஏற்பட்ட சுவாச பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். வீட்டில் உள்ளவர்களின் மனதை புரிந்து கொண்டு நடப்பீர்கள். மகிழ்ச்சியை அதிகரிப்பீர்கள்
சிம்மம்: கூட இருந்து குழி பறிக்கும் கூட்டத்தை அடையாளம் காண்பீர்கள். வேலை இடத்தில் செய்த சின்ன தவறால் தண்டனை பெறுவீர்கள். வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் அவமானப்படுவீர்கள். அலைச்சல் அதிகமாகி மனதளவில் சோர்வடைவீர்கள். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தியை பெறுவீர்கள்.
கன்னி: வயது மூத்தவர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். தொழிலை விரிவுபடுத்த அதிக முதலீடு செய்வீர்கள். பொருளாதாரத்தை உயர்த்தி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை பெறுவீர்கள். அன்புக்குரிய காதலி விருப்பப்பட்ட அணிகலனை வாங்கி கொடுப்பீர்கள். பெற்றோர்களில் உடல் நோயை தீர்க்க மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வீர்கள்.
துலாம்: உடலில் ஏற்படுகின்ற சிறிய நோயாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாதீர்கள். உடனே மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்ள மறக்காதீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் அலட்சியமாக இருந்தால் ஏமாற்றப்படுவீர்கள். உறவினர் தரும் உபத்திரவத்தால் மன உளைச்சல் அடைவீர்கள். காதலியிடம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலாமல் தவிப்பீர்கள்.
விருச்சிகம்: பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். சிறிய சகோதரியின் திருமணத்தை நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். தொல்லை கொடுத்த நோயிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தை விருத்தி செய்ய புதிய நண்பர்களை சேர்ப்பீர்கள். மனைவியின் பேச்சால் மனக்கலக்கம் அடைவீர்கள்.
தனுசு: பிரச்சனைகளில் இருந்து விலக நிலைத்தாலும் ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டால் பண இழப்பை அடைவீர்கள். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டு மன சஞ்சலப் படுவீர்கள். புதிய முதலீடுகளை செய்வதில் சிரத்தை காட்டாதீர்கள். எதிரிகளின் சூழ்ச்சியால் வெளிவட்டார செல்வாக்கில் சரிவை சந்திப்பீர்கள்.
மகரம்: பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தால் பெருமைப்படுவீர்கள். ஐ டி தொழில்துறையின் அபார வளர்ச்சியால் ஊதிய உயர்வை பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி காண்பீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கத்தில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் பண வரவால் பழைய கடன்களை அடைப்பீர்கள்.
கும்பம்: கோயில் திருப்பணிகளுக்கு பண உதவி செய்து பெரியோர் மனதில் இடம் பிடிப்பீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். காதலியின் மனம் நோகாமல் நடந்து கொள்வீர்கள். வீட்டிலும் வெளியிலும் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மனைவிக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வீர்கள்.
மீனம்: வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி லாபத்தை அள்ளுவீர்கள். தொழிலில் விறுவிறுப்பான முயற்சிகளால் எதிரிகளை திணறடிப்பீர்கள். வீட்டை புதுப்பிப்பீர்கள். புதிய மனை வாங்குவீர்கள். மகள் ஆசைப்பட்ட ஸ்கூட்டியை வாங்கி கொடுப்பீர்கள். மருத்துவ ரீதியான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். காதலியை கரம் பிடிக்க ஏற்பாடு செய்வீர்கள்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.