மேடம்: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று. பிணக்குகள் நீங்கும்.
இடபம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்புக் கரையும். சுமுக மான சூழ்நிலையே காணப்படும்.
மிதுனம்: மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மற்றவர்களுடன் பேசும் போது மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமை அவசியம்.
கடகம்: எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வீண் செலவுகள் மனச்சஞ்சலத்தை ஏற்படுத்தும்.
சிம்மம்: வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். சில சங்கடங்கள் ஏற்படும். செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். முருகப்பெருமான் வழிபாடு நன்று. வருமானத்தில் எதிர்பாராத தடை தோன்றும்.
கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சி கள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவர வுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. மகிழ்ச்சி ஏற்படும். இலாபம் அதிகரிக்கும்.
துலாம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள்.
விருச்சிகம் : புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீட்டில் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உணவு விடயத்தில் கவனம் தேவை.
தனுசு: மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். உறவுகளால் செலவுகள் ஏற்படும். குழப்பம் ஏற்படவாய்ப்பு உள்ளது. பெரியவர்களு டன் அனுசரித்துச் செல்லவும்.
மகரம்: மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். தந்தை வழி உறவி னர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மனவருத்தங்கள் நீங்கும்.
கும்பம்: பிறருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த காரியம் இழுபறியானாலும் முடிந்துவிடும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். காரியம் சாதகமாக முடியும்.
மீனம்: பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சமாளித்துவிட முடியும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.