மேடம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயற்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சிலருக்கு திடீர்ப் பணவரவு மகிழ்ச்சி தரும். செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இடபம்: வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும், சிலருக்கு திடீர்ப் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதரர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்கள்.
மிதுனம்: சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். சுபச்செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.
கடகம்:காரியம் இழுபறியாக முடியும். காரியங்க ளில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை தொடங்குவது நல்லது. உடல் அசதி உண்டாகும். விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். இலாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.
சிம்மம்: தன்னம்பிக்கையுடன் செயற்படுவீர்கள். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சு இழுபறியாகும்.
கன்னி: புதியமுயற்சி சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். மனதில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு நீங்கும்..
துலாம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு ஆதாயம் உண்டாகும். உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும்.
விருச்சிகம் : எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். கூடியவரை இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ள வேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும்.
தனுசு: மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆதாயம் பெறவும் வாய்ப்புள்ளது.
மகரம்: புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவைப் படும். சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
கும்பம்: எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வும். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்க வும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். நிதானம் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.
மீனம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயற்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் உண்டாகும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.