மேடம்: உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக மேலாளர்கள் தங்களை பாராட்டுவர். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். திடீர் பயணங்கள் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப காரியம் கைகூடும். நட்பு பலப்படும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.
ரிஷபம்: தம்பதிகளின் கருத்து ஒற்றுமை ஓங்கும். வியாபாரத்தில் போட்டியை வெல்வீர்கள். பூர்வ சொத்தில் உள்ள வில்லங்கம் நீங்கும். தங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர். விரும்பிய பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர்.
மிதுனம்: பணச்சிக்கல்கள் தீரும். வெளிநபர்கள் உதவுவர். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உடல் உபாதை இருக்கும். கவனம் தேவை. வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்: பெற்றோர்களின் உடல் நலத்தை கவனிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரித்தாலும் லாபத்தினை எட்டிவிடுவீர்கள். நீண்ட காலமாக காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும்.
சிம்மம்: உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் நினைத்த அளவு சம்பள உயர்வு கிடைக்கும். மாணவர்களின் முயற்சிகள் பலிதமாகும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புர். கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும்.
கன்னி: பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. பணவரவு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர்.
துலாம்: உத்யோகஸ்தர்களுக்கு வேலையை சுலபமாக அமையும். வியாபாரிகள் அரசு வகையில் ஆதாயபலன் பெறுவர். சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். உடல்நிலை எப்போதும் சீராக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். தொழிலதிபர்கள் தொழிலில் புதிய நவீன நுட்பத்தை கையாள்வர்.
விருச்சிகம்: அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளின் திருமண கனவு நிறைவேறும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் வாழ்வில் வசந்தம் வீசும். காதல் விசயத்தில் விழிப்பாக இருப்பது நலம்.
தனுசு: உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு உண்டாகும். கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எங்கு சென்றாலும் உங்களுக்கு செல்வாக்கு இருக்கும்.
மகரம்: வேலை இல்லாதவர்களுக்கு தங்கள் கடின முயற்சியால் சுறுசுறுப்பு அவசியம். இல்லையென்றால் முக்கிய விசயத்தில் கோட்டை விடுவீர்கள். விரும்பிய வண்ணம் வேலை கிடைக்கும். தந்தைவழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். உடல் நிலை மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் இருக்கும்.
கும்பம்: தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
மீனம்: வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகள் வெற்றியடையும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நல்ல பொறுப்பு கிடைக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.