மேடம்: புதிய முயற்சிகளில் ஈடுபடும் முன் ஒருமுறைக்குப் பலமுறை சிந்திக்க வேண்டியது அவசியம். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
இடபம்: வாழ்க்கைத்துணை உறவினர்களால் செலவுகள் ஏற்படும். என்றாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பேசும்போது கவனமாக இருக்கவும்.
மிதுனம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்குப் பக்க பலம் கிடைக்கும். உறவினர்களால் ஆதா யம் உண்டாகும்.
கடகம்: குடும்பத்தில் தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பிரச்சினை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
சிம்மம்: மனதில் உற்சாகம் அதிகரிக்கும் நல்ல நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி: தேவையற்ற குழப்பங்கள் மனதில் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும்.நண்பர்களுடன் பேசுவது ஆறுதல் தரும்.
துலாம்: மனதில் துணிச்சலும் தன்னம்பிக்கையும் நிறைந்திருக்கும் நாள். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க லாம். செலவுகள் ஏற்படும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.
விருச்சிகம் : சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன், திடீர்ச் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள் எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். ஆதாயம் கிடைக்கும்.
தனுசு: நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள். எதிர் பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். ஆதாயம் உண்டாகும்.
மகரம் : தேவையான பணம் கையில் இருந்தாலும், குடும்பத்தினரால் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். முன்னேற்பாடுகளுடன் வெளியில் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்: புதியமுயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலம் பணவிரயத்துக்கு வாய்ப்பு உண்டு.
மீனம்: தொடங்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.